குற்றாலத்தில் அனுமதியின்றி இயங்கிய மனநல சிகிச்சை மையம்.12 பேர் மீட்பு -மருத்துவமனைக்கு சீல் 

by Editor / 11-08-2023 10:44:11pm
குற்றாலத்தில் அனுமதியின்றி இயங்கிய மனநல சிகிச்சை மையம்.12 பேர் மீட்பு -மருத்துவமனைக்கு சீல் 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் சித்த வைத்திய சாலைகள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் ஏர்வாடி பகுதியில் நடைபெற்ற  தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கபட்ட பல மன நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் உள்ள மனநல காப்பகங்கள் மூட அரசு உத்திரவிட்டது. இதன் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் மனநல காப்பகங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும் செயல்பட்டு வந்த ஏராளமான மனநல காப்பகங்கள் மூடப்பட்டன. தற்பொழுது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மற்றும் சில பகுதிகளிலும் மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருவதாகவும் இந்த மனநிலை காப்பகங்களில் பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சைகள் என்றபெயரில் சித்திரவதை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குற்றாலத்தில் உள்ள மனநல காப்பகங்களில் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்து உறுப்பினர்களை கொண்டு வந்து சேர்ப்பது குற்றால அருவி மூலிகை நிறைந்த நீர் வருவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்பி இங்கு கொண்டு வந்து குடும்பத்தினர்களையும் உறவினர்களையும் சேர்த்து சென்ற வண்ணமுள்ளனர். ஆனால் இங்கு அந்த முறையில் அனைத்தும் அப்படியே மாற்றப்பட்டு அறைகளுக்குள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கபட்டும் துன்புறுத்தப்படுவதாகவும் பல்வேறு மருந்துகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சங்கரன் கோவில் பகுதியைச் சார்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் என்பவரின் மகன் உமா மகேஸ்வரன் என்பவர் உடலில் காயங்களுடன் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தான் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்  ஸ்ரீ குரு மனநல சித்த மருத்துவமணை என்கின்ற பெயரில் செயல்பட்ட வைத்தியசாலையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மனநோயாளிகள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது இதனை தொடர்ந்து மருத்துவத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவருடைய கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றதை தொடர்ந்து இந்த விஷயம் வெளியே கசிய தொடங்கியது தொடர்ந்து அங்கு பல்வேறு விதமான அனுமதிகள் உள்ளிட்டு எதுவும் இல்லாமல் சிஜெயல் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துறை ரவிச்சந்திரன் என்னுடைய உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் உடைய இணை இயக்குனர் பிரேமலதா சித்த மருத்துவ அதிகாரி உஷா மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின திடீரென இன்று அந்த மனநல மருத்துவமனைக்கு சென்று  ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது அங்கு 11 ஆண்களும் நல்ல முறையில் பேசிக்  கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணும் அடைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது உடனடியாக 11 மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டு அந்த ஒரு இளம் பெண்ணையும் மீட்டு 12 நபர்களையும் செங்கோட்டை தாலுகா வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் உடனடியாக அனைவருக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர் இந்த வைத்தியசாலையினுடைய இரண்டு அறைகளுக்கு மூன்று இடங்களில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது மேலும் இது குறித்து தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் உடைய இணை இயக்குனர் டாக்டர் பிரேமாலதா செய்தியாளர்களிடம் கூறும் பொழுது மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியின் பேரில் இந்த இடத்தை ஆய்வு செய்ததாகவும் இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடக்கி வைக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்தது. காண்போரை கண்கலங்க வைத்தது மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சார்ந்த 18 வயது இளம் பெண் தாய் தகப்பன் இல்லாத சூழலில் ஒரு நபரை காதலித்ததை தொடர்ந்து அவரை கவுன்சிலிங் கொடுக்க தாய் மாமனால் இங்கு அழைத்து வந்ததாக கூறி இங்கு கடந்த 21 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு உள்ளதும் அந்த பெண்ணை அதிகாரிகள் குழு மீட்டதும் குறிப்பிடத்தக்கது. குற்றாலத்தில் செயல்பட்டு வந்த இந்த மனநிலை காப்பகத்தில் காமராஜ், முகேஷ், பாலாஜி, கவின் குமார், கிருஷ்ணமூர்த்தி,கிரிட்டா என்கின்ற இளம் பெண், ஆச்சிமுத்து, ஜெயக்குமார், ஐயனார், ராகுல், இசக்கி, சங்கர், ஆகிய 12 பேர்களை மீட்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ குரு மனநல சித்த மருத்துவமணைக்கு அதிகாரிகள் குழுவினர் சீல் வைத்தனர்.  இவர்கள் அனைவரும் வடகரை அன்பு இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குற்றாலம் பகுதியில் அனுமதி இல்லாமல் சில காப்பகங்கள் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, அவற்றையும் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்து அங்கு சிகிச்சை அளிக்கப்படுபவர்கள் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

குற்றாலத்தில் அனுமதியின்றி இயங்கிய மனநல சிகிச்சை மையம்.12 பேர் மீட்பு -மருத்துவமனைக்கு சீல் 
 

Tags :

Share via