வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக  10 மரக்கன்றுகள் நடக் கோரி வழக்கு

by Editor / 13-07-2021 07:49:42pm
வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக  10 மரக்கன்றுகள் நடக் கோரி வழக்கு

 


தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் லோபோ, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
அதில், "தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில்  சென்னை - கன்னியாகுமரி தொழில் திட்ட பிரிவின் கீழ் சாலை போடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்செந்தூரிலிருந்து - அம்பாசமுத்திரம் வரை உள்ள சுமார் 1500 மரங்கள் வெட்டப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாலை ஓரங்களில் உள்ள நூற்றாண்டுகளை கடந்த பெரிய மரங்கள் உட்பட நிழல் தரும் பல மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது. சாலையோர மரங்களை வெட்டாமல் மாற்று வழிகளை தெரிந்தெடுக்க வேண்டும் எனவும், கண்டிப்பாக அகற்ற வேண்டிய வரங்களை மாநில நெடுஞ்சாலைத்துறை இயந்திரங்கள் உதவியோடு மரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி வளர்க்க வழி வகை செய்ய வேண்டும் எனவும், வெட்டப்படுகின்ற ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக புதிதாக 10 மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து சென்னை - கன்னியாகுமரி தொழில்துறை நடைபாதை திட்டத்தின் இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


 

 

Tags :

Share via