வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி

by Staff / 10-03-2024 02:52:39pm
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநிலத்தின் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் போட்டியிடுகிறார். மேலும் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் மஹூவா மொய்த்ரா போட்டியிடுகிறார். தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் லஞ்சமாக பெற்ற வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via