200 யூனிட் இலவச மின்சாரம் - சித்தராமையா அறிவிப்பு

by Staff / 02-06-2023 05:18:07pm
200 யூனிட் இலவச மின்சாரம் - சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via
Logo