டி-20 உலகக்கோப்பைக்கான இடங்கள் தேர்வு

by Others / 17-04-2021 01:28:42pm
டி-20 உலகக்கோப்பைக்கான இடங்கள் தேர்வு

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் உலகக் கோப்பை டி-20 போட்டிக்காக இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் விசா வழங்கப்படும், மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 45 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த உலகக்கோப்பை டி-20 போட்டி குறித்து ஆலோசிக்க பிசிசிஐ உயர்மட்டக் குழு நேற்று காணொலி மூலம் கூடியது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி கூறுகையில் ' உலகக் கோப்பை டி-20 போட்டியை நடத்தும் இடங்கள் குறித்து பிசிசிஐ உயர்மட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது.
சிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 9 இடங்களில் போட்டியை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்தார். இறுதிப்போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags :

Share via