ஆப்பிரிக்க வைரஸ் - பொதுமக்களுக்கு தடை

by Staff / 26-03-2023 12:25:00pm
ஆப்பிரிக்க வைரஸ் - பொதுமக்களுக்கு தடை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. அவரது பண்ணையில் 2 பன்றிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்பிரிக்க வைரஸ் தாக்கி உயிரிழந்தன. இந்த நிலையில் தற்போது பண்ணையிலிருந்த 20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பன்றிகளை கொன்று புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பண்ணை அமைந்துள்ள இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories