தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிப்பு...

by Admin / 14-08-2021 05:24:50pm
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிப்பு...

 

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி தொழில்நுப்டச் சேவைகள் கூடுதல் காவல்துறை இயக்குநர் அம்ரேஷ் புஜாரி, செயலாக்கத்துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புலனாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 10 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, கன்னியாகுமரி குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்ட 15 பேர் சுதந்திர தினத்தன்று இந்தப் பதக்கங்களைப் பெற உள்ளனர்.
 
இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு, குடியரசுத் தலைவரின் புகழ்மிக்க சேவைக்கான காவல் பதக்கங்களும், 22 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 3 ஊர்காவல்படையினருக்கும், 5 தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கும் குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories