அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்றஉறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்.

by Admin / 27-06-2024 10:23:14am
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்றஉறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்.

 சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த 60 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று உள்ளனர்.. இதனைத் தொடர்ந்து அருகிலேயே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக முக்கிய பிரதிநிதிகள் பங்கு பெற்றுள்ள உண்ணாவிரத போராட்டமும் தொடங்கியது. சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது கண்டித்தும் கள்ளக்குறிச்சி விவகாரம் போன்ற பிரச்சனைகளை பேசுவதற்கு அனுமதி அளிக்காதது குறித்தும் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் விடியா திமுக முதல்வர் தயங்குவது ஏன்? 

கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? 

#பயமா_ஸ்டாலின் ?

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று 
@mkstalin
 உடனடியாக பதவிவிலக வேண்டும்! என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்,

 

Tags :

Share via