எழும்பூரில் இருந்து புறப்படும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ‘ஏசி’ பெட்டிகள் இணைப்பு

by Admin / 03-08-2021 02:35:45pm
எழும்பூரில் இருந்து புறப்படும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ‘ஏசி’ பெட்டிகள் இணைப்பு



   
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயிலில் (எண்:02654) வருகிற 24-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை மற்றும் திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இந்த ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
 
மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் மதுரை சிறப்பு ரெயிலில் (எண்:02638) வருகிற 23-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

சென்னையில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரெயிலில் (எண்:02637) வருகிற 26-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரெயிலில் (எண்:06795) வருகிற 24-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயிலில் (எண்:06796) வருகிற 26-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயிலில் (எண்:02654) வருகிற 24-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரெயிலில் (எண்:02653) வருகிற 25-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டி இணைக்கப்படும்.

 

 

 

Tags :

Share via