17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆயுதப்படை காவலர் கைது காவல் நிலையத்தில் இருந்து தப்பியோட்டம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பிரபாகரன் (36)இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும் தீரண்ராஜ், சமரன் என்கிற இரு மகன்களும் உள்ளனர், இதனிடையே பிரபாகரன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் கடந்த 19ம் தேதி முதல் ஆல்பா 2 ஆம் பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வுக்காக தனது சொந்த ஊரான சிறுவாச்சூருக்கு சென்றுள்ளார், அப்போது அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது, இன்னிலையில் சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர்,
அப்போது போலீசாரின் பிடியில் இருந்த பிரபாகரன் போலீசாருக்கே தண்ணி காட்டிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார், பிரபாகரனை போலீசார் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை, இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள சிசிடிவி கேமராவில் காவல் நிலையத்தில் இருந்து பிரபாகரன் தப்பியோடியதும் அவரை அழைத்து செல்ல காவல் நிலையத்திற்கு முன்பு ஹெல்மெட் அணிந்தபடி இருச்சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர் யார் என்றும் சிசிடிவி வீடியோ ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
Tags :