பாஜக தொண்டர்கள் வாகனங்கள் மீது முட்டை, தக்காளி, தண்ணீர் பாக்கெட்டுகள் வீச்சு.சாலை மறியல்.

by Editor / 25-03-2023 07:24:53am
பாஜக தொண்டர்கள் வாகனங்கள் மீது முட்டை, தக்காளி, தண்ணீர் பாக்கெட்டுகள் வீச்சு.சாலை  மறியல்.

 

*பாஜக தொண்டர்கள் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்  மறியல்  .*

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள வாய்க்காலம் பகுதியில் நேற்று தென்காசி மாவட்ட பாஜகவின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட சூழலில், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 இந்நிலையில், கூட்டம் முடிவடைந்த சூழலில், பாஜக தொண்டர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் சூழலில், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி- திரிகூடபுரம் பகுதியில் பாஜகவினர் சென்ற வாகனங்கள் மீது சில மர்ம நபர்கள் தண்ணீர் பாக்கெட்டுகள், முட்டை, தக்காளி உள்ளிட்ட பொருட்களை வீசியிருந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த பாஜக தொண்டர்கள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறங்கி முட்டை, தண்ணீர் பாக்கெட், தக்காளி உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்த நபர்கள் தேடி பார்த்துள்ளனர்.

 ஆனால், யாரும் கண்ணில் சிக்காததால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

 மேலும், தாக்குதல்  நடத்தியவர்களை கைது செய்ய வலியுரித்தி பாஜகவினர் நடத்தி வரும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தற்போது அணிவகுத்து நின்றது.

 இதனை தொடர்ந்து ஏரளமான போலிசார் குவிக்கப்பட்டதை தெடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சாலைமறியலில் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் காவல் நிலையில் புகார் அளித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

பாஜக தொண்டர்கள் வாகனங்கள் மீது முட்டை, தக்காளி, தண்ணீர் பாக்கெட்டுகள் வீச்சு.சாலை  மறியல்.
 

Tags :

Share via

More stories