இளைஞர் வெட்டி படுகொலை; போலீசார் விசாரணை

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சி, ஆலம்பட்டி கிராமத்தில் கோயில் அருகேயுள்ள கண்மாயில் இளைஞரை மா்ம நபா்கள் வியாழக்கிழமை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.அதன்பேரில் போலீஸாா் சென்று, அங்கு கிடந்த சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், அவா் ஆலம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த கனகராஜ்-சுலோச்சனா தம்பதியின் மகன் அருண்பாரதி (20) எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைத் தேடிவருகின்றனா்.
Tags :