20 வயதுக்கு உட்பட்ட 20 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

இன்று ஞாயிற்றுக்கிழமை தென்கொரியாவின் சியோனில் 20 வயதுக்கு உட்பட்ட 20 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 47 பேர் உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 1500 தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தடகளப் போட்டியின் பயிற்சியாளர் கமல் அலிகான் வீரர்களை புது தில்லியில் இருந்து சீயோன் செல்லும் விமானத்தில் கொரியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 18 வயதுக்கு உட்பட்ட ஆசிய 400 மீட்டர் சாம்பியன் மற்றும் இந்த ஆண்டு ஆசியாவின் வேகமான 20 வயதுக்குட் பட்ட கால் இறுதி இந்தியவீரரான சோனா மலிக் ஹீனா இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :