கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - இ.பி.எஸ் வலியுறுத்தல்

by Staff / 10-02-2024 04:52:58pm
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - இ.பி.எஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஏடிஎம், உணவகம் உள்ளிட்ட அடிப்படை அங்கு வசதிகள் இல்லை. மெட்ரோ ரயில், நகர பேருந்து வசதியின்றி, தனியார் வாடகை வாகனங்களுக்கு அதிக அளவு பணம் கொடுப்பதால் மக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர். எனவே அடிப்படை வசதிகளை அரசு உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுருத்தினார்.

 

Tags :

Share via