விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தனியே பிரிந்தது.

by Editor / 24-08-2023 10:33:13am
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தனியே பிரிந்தது.

'சந்திரயான்-3' மிஷன் நேற்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்நிலையில், தென்துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தனியே பிரிந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று வெளியான அறிவிப்பில், லேண்டரில் சாய்வுதளம் திட்டமிட்டபடி திறந்து அதன் வழியாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. அடுத்த 14 நாட்களில் ரோவர் லேண்டர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் ரோவர் தற்போது சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ள துவங்கியது என தெரிவித்துள்ளது.

 

Tags : பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தனியே பிரிந்தது

Share via

More stories

Logo