தீண்டாமை சுவர் இடிப்பு.. கனிமொழி எம்.பி அதிரடி

by Staff / 11-02-2024 03:30:02pm
தீண்டாமை சுவர் இடிப்பு.. கனிமொழி எம்.பி அதிரடி

கனிமொழி எம்.பி பொது மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைளை கேட்டு செயல்படுத்தி வருகிறார். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய கனிமொழி எம்.பியிடம், திருப்பூர் மாவட்ட அவிநாசி அருகே உள்ள சேவூர் ஊராட்சி தேவேந்திர நகரை சார்ந்த மனோன்மணி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன் அவரது பகுதியில் கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை உடனடியாக செயல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜுக்கு உத்தரவிட்டதன் பேரில் 2 மணி நேரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுவர் இடிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories