"மாற்றி மாற்றி பேசுகிறாரா ராமதாஸ்?" - நிர்வாகிகள் கேள்வி

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மாற்றி மாற்றி பேசுவதாக சமூக வலைதளங்களில் பாமக நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தைலாபுரத்தில் நேற்று (மே 28) நடந்த சமூக ஊடகப்பேரவைக் கூட்டத்தில் 'அன்புமணியை முதலமைச்சராக்க பாடுபடுங்கள்' என பேசிய ராமதாஸ், இன்று சரமாரியாக விமர்சிப்பது ஏன்? என சமூக வலைதளங்களில் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Tags :