பக்ரீத் பண்டிகை - தலைமை ஹாஜி அறிவிப்பு
21ஆம் தேதி தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.
ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.ராமநாதபுரம் , நெல்லை உள்ளிட்ட இடங்களில் நேற்று துல் ஹஜ் மாத பிறை ஷரியத் முறைப்படி தென்பட்டது . எனவே , இன்று துல் ஹஜ் மாத முதல் பிறாஈ என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது . ஆகையால் பக்ரீத் பண்டிகை ஜூலை 21 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :