17 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலின் 3 வாசல்கள் திறப்பு

by Editor / 12-07-2021 10:57:07am
17 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலின் 3 வாசல்கள் திறப்பு

2004-ஆம் ஆண்டு மூடப்பட்ட நெல்லையப்பர் கோவிலின் 3 வாசல் கதவுகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட கதவுகள் வழியாக பக்தர்கள் உற்சாகமுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர் .

கடந்த 17 ஆண்டுகளாக வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு வாசல் கதவுகளும் பூட்டியே கிடந்தன. முக்கிய திருவிழா நேரங்களில் மட்டும் அந்த மேற்கு வடக்கு ஆகிய இரண்டு கோபுரங்களின் கதவுகளும் திறக்கப்படும். திருவிழா முடிந்த மறு நொடியே கதவுகள் மீண்டும் மூடப்பட்டு விடும் .

இந்த சூழ்நிலையில்  இந்து சமய  அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பில்  கோவிலில் பூட்டிக்கிடக்கும் வடக்கு மற்றும் மேற்கு புற வாசலை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறினார் அவர் உத்தரவை தொடர்ந்து கோவிலின் மேற்கு வடக்கு மற்றும் தெற்கு வாசல்களையும் உடனடியாக பரமரிப்பு பணிகள் செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் இன்று வடக்கு தெற்கு மற்றும் மேற்கு வாசல் கதவுகள் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக கோவில் யானை காந்திமதி வரவழைக்கப்பட்டு  கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர் 3 வாசல் கதவுகளுக்கும் சிறப்பு தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் கதவுகள் திறக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவிலில் நான்கு வாசல்கள் திறக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அந்த வழியை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் கொரோனா  நடைமுறையை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர் 

 

Tags :

Share via