உத்தவ் தாக்ரே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

by Staff / 22-02-2023 02:38:07pm
உத்தவ் தாக்ரே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சிவசேனா கட்சி, சின்னத்தை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் சிவசேனா வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு மத்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள சிவசேனா நாடாளுமன்ற அலுவலகமும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவின்படி இது ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo