காய்ச்சலுக்கு எட்டு வயது குழந்தை உயிரிழப்பு

by Staff / 19-03-2024 03:08:10pm
காய்ச்சலுக்கு எட்டு வயது குழந்தை உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மேலக்கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இந்த பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காய்ச்சல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.4 வயது முதல் 15 வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆனந்தவள்ளி (8 ) என்ற சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சிறுமி உயிர் இழந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் உறவினர்கள் விசாரித்த போது குழந்தைக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கும் தான் தாங்கள் சிகிச்சை அளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo