முன்னாள் மிஸ்டர் இந்தியா மாரடைப்பால் மரணம்

நாட்டில் மாரடைப்பு மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், ராஜஸ்தானை சேர்ந்த பாடி பில்டர், முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம் ராஜ் (42) மாரடைப்பால் இறந்தார். காலையில் உடற்பயிற்சி செய்த பின்னர், கழிவறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. குடும்பத்தினர் குளியலறை கதவை உடைத்து பார்த்தபோது பிரேம் ராஜ் மயங்கி கிடந்தார். உடனடியான உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :