புதிய முதுகலை படிப்புகளுக்கு 31ஆம் தேதி நுழைவுத் தேர்வு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு.

by Editor / 21-07-2023 09:20:33am
 புதிய முதுகலை படிப்புகளுக்கு  31ஆம் தேதி நுழைவுத் தேர்வு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வருகிற 31ஆம் தேதி நடைபெறும்.மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு

திருவாரூர் அருகே நீலக்குடி என்கிற இடத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதுகலை படிப்புகளன M.Sc. கணிதம், M.Sc. பயோ டெக்னாலஜி, M.Sc. இயற்பியல் மற்றும் PG. Dip. டேட்டா சயின்ஸ், PG. Dip. பிட்னஸ் மேனேஜ்மென்ட் ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வு 31.07.2023 அன்று நடத்தப்படும்.மேலும் நுழைவுத் தேர்வு, திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான அனுமதி சீட்டு பல்கலைக்கழக இணையதளத்தில் 26.07.2023 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் தகவலுக்கு, https://cutn.ac.in/ பல்கலைக்கழக  இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo