தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சிவகங்கை மாவட்டம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியை சித்ரா. இவர், வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த 7ஆம் வகுப்பு மாணவியை, 400 முறை தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆசிரியை சித்ராவிற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பரிந்துரை செய்தார்.
Tags :