உலகின் முதல் 3 கடற்படைகளில் இந்தியா இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை - ராஜ்நாத்சிங்

by Editor / 25-06-2021 08:49:41pm
உலகின் முதல் 3 கடற்படைகளில் இந்தியா இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை - ராஜ்நாத்சிங்

 


மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி இன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு முற்றிலும் இந்திய தயாரிப்பிலேயே உருகி வரும் அதிநவீன ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்கப்பல் கட்டும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். 
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த அதிநவீன விமானம் தாங்கி போர்கப்பல் தற்போது கட்டுமான பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த விமானம் தாங்கி போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.  
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமான பணிகளை பார்வையிட்ட பின்னர் கடற்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, உலகின் முதல் 3 கடற்படைகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என நான் நம்புகிறேன் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

 

Tags :

Share via

More stories