அலாஸ்காவில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் இன்று 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள அலாஸ்கா தீவில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.2ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அலாஸ்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
Tags :