ரஷிய ராணுவம் அறிவிப்பு

by Admin / 02-03-2022 03:26:16pm
 ரஷிய ராணுவம் அறிவிப்பு

உக்ரைன்  ரஷியா இடையே இன்று 7-வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா தீவிர தாக்குதலை ரஷியா தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உக்ரைனின் மற்றொரு நகரமான சுமி மீதும் ரஷியா விமானப்படை செல் குண்டுகள் பொழிந்து தாக்கி வருவதாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. இதனை கெர்சன் நகர் ஆளுநரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சூழ்நிலையில்  கீர், கார்கிங் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியேற இந்திய மாணவர்கள் ரெயில் நிலையங்களில் காத்திருக்கிறார்கள். சில இடங்களில் இந்திய மாணவர்களை ரெயிலில் ஏற உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories