ரூ.3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

by Editor / 01-04-2025 12:23:37pm
ரூ.3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

நாமக்கல்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (மார்ச் 31) மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடர்பாளையம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், கொடுமுடி, துறையூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனர். விரலி மஞ்சள் ரூ.12,688 முதல் ரூ.16,399 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11,284 முதல் ரூ.13,569 வரையும், பனங்காளி ரூ.23,085 முதல் ரூ.26,599 வரையும் ஏலம் போனது. மொத்தம் 4,820 மூட்டைகள் ரூ.3.80 கோடிக்கு விற்பனையானது.

 

Tags :

Share via