சாமி ஊர்வலத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய பூசாரிகள்

by Staff / 25-02-2025 05:11:11pm
சாமி ஊர்வலத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய பூசாரிகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மந்தாசா கிராமத்தில் ஸ்ரீ வாசுதேவ பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில், கடந்த 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 16ஆவது பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக நடந்த தேர் ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்ட DJ பாடலுக்கு அக்கோவிலின் பூசாரிகள் உற்சாகமாக பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பலர் இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via