10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

by Staff / 25-02-2025 05:25:46pm
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், இடைநிலை மற்றும் முதல் நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமான நடைபெற்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்த நிலையில்,   இந்த ஆர்ப்பாட்டத்திற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via