தமிழகமே மதுவுக்கு அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது-பிரேமலதா விஜயகாந்த் 

by Editor / 28-05-2023 08:19:52am
தமிழகமே மதுவுக்கு அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது-பிரேமலதா விஜயகாந்த் 

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் எல்லாம் கண் துடைப்பு நாடகம் திராவிட மாடல் என்று கூறி தமிழக முதல்வர் நிமிஷத்துக்கு ஒரு டிரெஸ்ஸை மாட்டிக்கொண்டு மாடலாக மாறியுள்ளார்  எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அரசாங்கம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின் மெடிக்கல் காலேஜ் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது முறையாக பள்ளி கட்டிடம் கட்டப்படுவதில்லை மருத்துவக் கல்லூரிகளை முறையாக கட்டிடம் கட்டப்படுவதில்லை ஆனால் ஆங்காங்கே 500 டாஸ்மாக் கடைகள் உள்ளன கள்ளச்சாராயம்  எலைட் பார் தானியங்கி மூலம் மது விற்பனை தமிழகமே மதுவுக்கு அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் வேதனை

இதற்கு காரணம் தமிழக அரசு மற்றும் ஆட்சி குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக  அனைத்து தரப்பினரையும் போதையில் வைத்துள்ளது. 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு ஐடி ரெய்டு வரும்போது தகவல் சொல்லவில்லை என்று காவல்துறை சொல்கிறார்கள் ரெய்டு என்றால் யாருக்கும் சொல்லாமல் வருவது தான் இதிலிருந்து காவல் துறை கைப்பாவையாக மாறிவிட்டது என்பது தெரிகிறது கேட்டு திறக்காமல் அதிகாரிகள் எகிரி குறித்து சோதனை செய்கிறார்கள் என்கிறார்கள் கேட் திறக்கவில்லை என்றால் அதிகாரிகள் ஏறி குதித்து சோதனை செய்வது தான் வழக்கம்  வருமான வரி துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கு, நியாயத்தை பேசுபவர்களுக்கு, கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை என்றால் 2 ஆண்டுகள் இருண்ட ஆட்சி என  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via