சண்டை பயிற்சியாளர்கள் பாதுகாப்பு வாரியம்: திருச்சி சிவா வலியுறுத்தல்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சண்டை பயிற்சியாளர் ஏழுமலை திரைப்பட படப்பிடிப்பின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, திரைப்படத்துறையில் சண்டை பயிற்சியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். படப்பிடிப்பு தளங்களில் சர்வதேச தரத்திலான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும், சண்டை பயிற்சியாளர்கள் பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags :