புற்களில் பரவிய தீயை அணைக்க முயன்றவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழப்பு

by Editor / 01-04-2025 12:21:34pm
புற்களில் பரவிய தீயை அணைக்க முயன்றவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மஞ்சக்குடியில் தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்த சேகர், சம்பவத்தன்று காய்ந்த புற்களில் பரவிய தீயை அணைக்க முற்பட்டார். அப்போது, தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். சேகரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால், காவல்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

 

Tags :

Share via