சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து கட்-அவுட்

by Staff / 19-09-2023 11:30:58am
சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து கட்-அவுட்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட் - அவுட் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் சோனியா காந்தியை அம்மன் வேடத்தில் சித்தரித்து கட் அவுட் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து இந்த போஸ்டர் சனாதன தர்மத்துக்கு எதிரானது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories