மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் உடன்பாடு இல்லை - சிபிஎம் முடிவு

by Staff / 19-09-2023 11:26:15am
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் உடன்பாடு இல்லை - சிபிஎம் முடிவு

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. தேசிய அளவில் கூட்டணியில் இருந்தாலும், உள் மாநிலத்திற்குள் மம்தா பானர்ஜியுடன் ஒத்துழைக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. கூட்டணியோ அல்லது தொகுதி பங்கீடு உள்ளிட்ட எதிலும் இணக்கம் காட்ட மாட்டோம் என கூறியுள்ளது. மேற்குவங்கத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சம அளவில் எதிர்ப்போம் என கூறியுள்ளது. தேசிய அளவில் கூட்டணியில் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸுடம் எலியும், பூனையுமாக உள்ளன. இதே நிலைதான் கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையே நீடிக்கிறது.

 

Tags :

Share via