நண்பர்களால் கொலையாகும் நண்பர்கள். 

by Staff / 28-07-2025 10:05:46am
நண்பர்களால் கொலையாகும் நண்பர்கள். 

சென்னை ஐசிஎஃப் பகுதியில் பாஜக மாநில நிர்வாகியின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில நிர்வாகி மருதுபாண்டியின் சகோதரர் விஜயகுமார் அவரது வீட்டில் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில் விஜயகுமாரை, அவரது நண்பர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் மதுபோதையில் இருந்த நண்பர்களால் கீழே தள்ளிவிடப்பட்டு படுகாயமடைந்து பரிதாபமாக பலியான நிலையில் மற்றொரு சம்பவம் நண்பர்களின் மது போதையால் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Friends being killed by friends.

Share via