வெலிங்டனில், தலைமை தளபதிக்கும், அதிகாரிகளுக்கும் புகழஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த முப்படைத் தலைமை தளபதி பிபிவின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றார்.அங்கிருந்து வெலிங்கடன் ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சையில் உள்ள விமானப்படை கேப்டனின் உடல்நிலை குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகளிடம் விசாரித்தார்.முன்னதாக தலைமை தளபதிக்கும், அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.அமைச்சர் நேரு,டிஜிபி,சைலேந்திரபாபு உள்ளிட்டோர்உடனிருந்தனர்.

Tags :