தவெக கொடிக்கம்பம் விழுந்து விபத்து நடிகர் பாலாஜி அறிவுரை.

by Staff / 20-08-2025 11:01:30pm
தவெக கொடிக்கம்பம் விழுந்து விபத்து நடிகர் பாலாஜி அறிவுரை.

 
தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) மதுரையில் நடைபெற இருக்கும் நிலையில், இன்று 100 அடி உயர கொடிக்கம்பம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இது குறித்து தவெகவின் உறுப்பினரும், நடிகருமான தாடி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று விழுந்த கொடிக்கம்பம் நாளை விழுந்திருந்தால், எத்தனை உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கும்?. எனவே, இது மாதிரியான வேளைகளில் மிகவும் கவனம் தேவை" என தெரிவித்துள்ளார்.
 

 

Tags : தவெக கொடிக்கம்பம் விழுந்து விபத்து நடிகர் பாலாஜி அறிவுரை.

Share via