கந்துவட்டி கொடுமைஆற்றில் குதித்து பெண் தற்கொலை.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள கொட்டுவாலியை சேர்ந்தவர் ஆஷா (46). இவர் பிந்து, பிரதீப் தம்பதியிடமிருந்து அதிக வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கந்துவட்டி முறையில் ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.20 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். முழுமையாக பணம் அடைக்கப்படவில்லை என கூறி ஆஷாவுக்கு தொல்லை கொடுத்து இருவரும் நேற்று மிரட்டியுள்ளனர். மன உளைச்சல் அடைந்த ஆஷா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை போலீசார் இன்று காலை மீட்டனர்.இந்த சமத்துவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : A woman from Kottuvali near Ernakulam, Kerala, committed suicide by jumping into the river