ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதி

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி தொடர்பான உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவர் எழுப்பட்ட பகுதியில் வைத்து நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும், கடுமையான ஒழுங்குகளுடன் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :