சீன அதிபரின் சமத்துவ சிந்தனைகள் பாடப் புத்தகங்களில் சேர்க்க முடிவு.!!

by Admin / 25-08-2021 01:06:52pm
சீன அதிபரின் சமத்துவ சிந்தனைகள் பாடப் புத்தகங்களில் சேர்க்க முடிவு.!!

சீன அதிபர் ஜி ஜின்பிங்-யின் சமத்துவ சிந்தனைகள் அந்நாட்டின் தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை வலுவாக மாற்றியவர்களைப் பற்றி பேசும்போது, சீனாவின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்ட பொருளாதார புரட்சியை ஏற்படுத்திய டெங் ஷியாபிங், மா சே துங், மற்றும் தற்போதைய தலைவர் ஷி ஜின்பிங் ஆகிய மூவரின் பெயர் முதலிடங்களைப் பிடிக்கும்.

இந்த நிலையில் சீன இளைஞர்களிடையே மார்சிசத்தின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அதிபர் ஜி ஜின்பிங்-யின் சமத்துவ சிந்தனைகளை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஜி ஜின்பிங்-யின் சோசலிசத்துக்கான சமத்துவ சிந்தனைகள் தொடக்க பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கற்பிக்கப்படும் என அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 "தேசபக்தி உணர்வுகளை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Tags :

Share via