கஞ்சா சாக்லேட்டை விற்பனை செய்து வந்த ஜார்க்கண்ட் மாநில வாலிபர் கைது.

by Editor / 08-10-2024 12:16:43am
கஞ்சா சாக்லேட்டை விற்பனை செய்து வந்த ஜார்க்கண்ட் மாநில வாலிபர் கைது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவதாத்தா போரா என்பவர் சொந்தமாக மளிகை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்லடம் போலீசார் சிவதாத்தா போரா நடத்தி வந்த மளிகை கடையில் தீவிர சோதனை நடத்தினர். இதில் சிவதாத்தா போரா கடையில் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவதாத்தா போராவை கைது செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : கஞ்சா சாக்லேட்டை விற்பனை செய்து வந்த ஜார்க்கண்ட் மாநில வாலிபர் கைது.....

Share via

More stories