காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர்-தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சந்திப்பு

by Admin / 23-02-2026 02:57:09pm
காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர்-தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சந்திப்பு

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனைத்து கட்சிகளின் செயல்பாடுகளில் விறுவிறுப்பும் பரபரப் பாக ....கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு, மாவட்டங்கள் தோறும் நிகழ்த்தப்படும் மாநில மாநாடுகள் மண்டல மாநாடுகள் என களம் சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றது.இந்நிலையில், இன்று தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரும் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவருமான கிரீஸ் சோடங்கர், செல்வப் பெருந்தகை ஆகியோர் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சி.ஐ.டி நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்தது..பிப்ரவரி தொடக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கனிமொழியுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தார் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இருவரும் ஒன்றாக பங்கேற்று ஆலோசனை நடத்தினர் . நேற்று இரவு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கனிமொழியும் பங்கேற்று இருந்தார். திமுக காங்கிரஸ் இலையான சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த கூட்டத்தில் க்ரிஷ் சோழங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகோர் ஆகியோர் பங்கேற்கவில்லை காங்கிரசின் சார்பில் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், டி .எஸ் சிங் தியோ ஆகியோர் பங்கேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுலபமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via