தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

by Admin / 23-02-2026 03:32:02pm
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்புதீவிர திருத்த பணிகளுக்கு பின் இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,78,38,925, பெண் வாக்காளர்கள் 2,89,60,838, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 போலி வாக்காளர்கள் இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களை கண்டறியும் நோக்கில் சுமார் 97.37 லட்சம் பெயர்கள் வரவு பட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 18-19 வயதுக்குட்பட்ட சுமார் 12.51 லட்சம் இளம் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்கள்3.99 லட்சம்.  சோழிங்கநல்லூரில் 5,36991 வாக்காளர்கள் இருப்பதன் மூலம் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக இது மாறி உள்ளது. வாக்காளர் குறைந்த தொகுதியாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 896 பேர் உள்ளனர்.

 

Tags :

Share via