அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான்கள்

by Editor / 04-09-2021 05:53:36pm
அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான்கள்

ஆப்கனில் தலிபான்கள் தலைமை யில் அமையவுள்ளஅமைச் சரவையில் பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து தலிபான் கள் செய்தித் தொடர் பாளர் சபிஹுல்லா இத் தாலி செய்தி நிறுவனத் துக்கு அளித்த பேட்டியில் , " எதிர்காலத்தில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களில் பயில பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் . பெண்கள் மருத்துவ மனைகளில் செவிலியரா கவும் , காவல்துறையிலும் பணியாற்ற அனுமதிக் கப்படுவார்கள் . அமைச்ச ரவையில் உதவியாளராக இருக்க அனுமதிக்கப்படு வர் . ஆனால் , தலிபான்கள் தலைமையில் அமைய வுள்ள அமைச்சரவையில் பெண்கள் அமைச்சர்க ளாகும் வாய்ப்பில்லை " என்று தெரிவித்துள்ளார் .

மேலும் , " ஆப்கானிஸ் தானைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவ தற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம் . சீனா எங் களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கி றது . பொருளாதாரத்தை வலுப்படுத்த , நிதியளிக்க சீனா தயாராக இருக்கி றது " என்று சபிஹுல்லா தெரிவித்தார் .

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னதாகவே சீனாவின் முக்கிய அமைச்சர்களு டன் தலிபான்கள் ஆலோ சனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் ஆப்கானிஸ் தானுடனான ( தலிபான் கள் ) நட்புறவுக்குத் தயா ராக இருக்கிறோம் என்று சீனா சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via