ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்

by Editor / 10-03-2023 03:13:24pm
 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்தவிசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் ஆகியோர்  தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார்.இதன் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவிக்கையில்  ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் குறைகளை போக்க தொடர்ந்து முயற்சி செய்வேன். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை தொடர்ந்து செயல்படுவதையே விரும்புகிறேன் என்றார்.

 

Tags :

Share via