ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசு அகற்றும்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசே அகற்றும் என்று தற்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழக அரசு அகற்றினாலும் அதற்கான செலவை ஸ்டெர்லைட் ஆலை ஏற்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்ப்பட்டுள்ளது.
Tags :