ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

by Staff / 04-05-2023 12:46:49pm
ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்துகள் அலுவலகம் உள்ளது. அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் மாலை பணி முடிந்து சென்ற நிலையில் இரவில் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக செங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினார்கள்.  தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக மாதவரம், அம்பத்தூர் என 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் இருந்த கணினிகள், முக்கிய இடங்களில் எரிந்து சேதமானதாகவும், மின் கசி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories