மனைவியை தீ வைத்து கொலை முயற்ச்சி-கணவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

களியக்காவிளை அருகே வன்னியூர் தெற்றிக்குழியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் 41 இவர் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ம் தேதி வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு மனைவி வினிதாவிடம் பணம் கேட்டுள்ளார்
இதற்கு வினிதா மறுப்பு தெரிவித்துள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த கிறிஸ்டோபர் மனைவி வினிதாவை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார் இதில் வினிதா படுகாயம் அடைந்தார்
இது குறித்து பழுகல் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு குழித்துறை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது
வழக்கை விசாரித்த குழித்துறை செசன்ஸ் சப் ஜட்ஜ் சரவணபவன் ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை 5ஆயிரம் ரூபாய் அபராதம் கிறிஸ்டோபருக்கு விதித்து தீர்ப்பு வழங்கினார் இதனைத் தொடர்ந்து இவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்
Tags :