சட்டம் ஒழுங்கு பிரச்சனைகாரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

by Editor / 30-09-2022 04:39:39pm
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகாரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் துரை முருகன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது:
துறைரீதியிலான  ஆய்வு கூட்டம்.வேலைகளில் உள்ள சுனக்கங்களை கூறி விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாகவும்,வடகிழக்கு பருவ மழை தொடர்பாகவும் பேசப்பட்டது; கடந்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது போல், இந்தாண்டு பாதிப்புக்கள் உருவாக்கத்தவண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் தெரிவிக்கபட்டதாகவும்,புதிய அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் பாலாற்றில் அணை கட்ட செயலாக்கத்தில் ஈடுபட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு துரிதப்படுத்தப்படும்.என்றும்,ஆரணி, கொசஸ்த ஆறுகளில் தடுப்பணை கட்ட ஆய்வு மேற்கொள்ளபபட்டுள்ளதாகவும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்,எளாவூர் 7 கண்பாலத்தில் தடுப்பணை கட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்-என அமைச்சர் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via

More stories